தமிழகச் சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வரும் வேளையில், நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் (தவெக) தங்களது கட்சியைப் பலப்படுத்தும் பணிகளில் தீவிரமாக இறங்கியுள்ளது. இதன் ஒரு பகுதியாக, இன்று (ஜனவரி 5) சென்னையில் உள்ள தவெக தலைமை அலுவலகத்தில் முக்கிய சேர்க்கை நிகழ்வு நடைபெற்றது. இதில் மறைந்த முன்னாள் முதல்வர் பெருந்தலைவர் காமராஜரின் பேத்தி மயூரி, தவெக தலைவர் விஜய் முன்னிலையில் தன்னை அக்கட்சியில் இணைத்துக் கொண்டார்.

மயூரியைத் தொடர்ந்து, ஓ.பன்னீர்செல்வத்தின் தீவிர ஆதரவாளர்கள் 50-க்கும் மேற்பட்டோரும் இன்று தவெகவில் இணைந்தது அரசியல் வட்டாரத்தில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. தேர்தல் களத்தில் மற்ற கட்சிகளுக்குப் போட்டியாகத் தங்களை நிலைநிறுத்திக்கொள்ள, மாற்றுக்கட்சியினரை வளைப்பதில் தவெக காட்டி வரும் இந்த வேகம், அக்கட்சியின் அடுத்தகட்ட நகர்வாகப் பார்க்கப்படுகிறது.
