தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவரும் தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவருமான விஜய் வீட்டில் இன்று அதிகாலை மொட்டை மாடியில் அமர்ந்திருந்த இளைஞர் ஒருவரால் பரபரப்பு ஏற்பட்ட நிலையில் விஜய் வீட்டின் காவலாளிகள் அவரை பிடித்து போலீஸ் ஸ்டேஷனில் ஒப்படைத்தனர். விஜய் வீட்டின் பெரிய கதவுகள் மற்றும் காவலாளிகள் பாதுகாப்புகள் ஆகியவற்றை மீறி அந்த வாலிபர் எப்படி விஜய் வீட்டிற்குள் நுழைந்தார் என்பது குறித்து போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் கைதான வாலிபர் மதுராந்தகத்தைச் சேர்ந்த 24 வயது உடையவர் என்பதும் அவர் மனநலம் பாதித்து தன்னுடைய சித்தி வீட்டில் தங்கி இருந்தார் என்பதும் முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. போலீசார் அவரை கீழ்ப்பாக்கம் மனநல மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். மேலும் தற்போது விஜய் வீட்டில் பாதுகாப்பு குறைபாடுகள் குறித்து அதிரடியாக சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
