தமிழகத்தின் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ. தீபா. ஜெயலலிதாவின் வாரிசு என இவர் அறியப்படுகிறார். இந்நிலையில் ஜெயலலிதாவின் 36 கோடி வருமான வரியை செலுத்த வேண்டுமென வருமானவரித்துறை அனுப்பிய நோட்டீசை எதிர்த்து தீபா சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.
இந்த நோட்டீசை எதிர்த்து தீபா தொடர்ந்த வழக்கை தற்போது சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. மேலும் வருமானவரித்துறை தரப்பில் வரித்தொகையை 13 கோடி ரூபாயாக திருத்தி புதிய நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.
