தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவரும் நடிகருமான விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா விவாகரத்து வழக்கு இன்று செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் விசாரணைக்கு வர இருந்த நிலையில் தற்போது அந்த வழக்கில் விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அதாவது இன்று ஏப்ரல் 20 விசாரணை நடைபெற இருந்த நிலையில் திடீரென விவாகரத்து வழக்கு ஜூன் 15ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. முன்னதாக சங்கீதா கடந்த பிப்ரவரி மாதம் விஜய்யிடமிருந்து விவாகரத்து வேண்டும் என செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
அவர் பிரபல நடிகை ஒருவருடன் திருமணத்தை மீறிய உறவில் இருப்பதாகவும் இது தனக்கு தெரியவந்த போது தனக்கு பொருளாதார ரீதியாக கட்டுப்பாடுகளை விதித்து தன்னையும் தன் குழந்தைகளையும் மனரீதியாக துன்பப்படுத்தியதாகவும் தன் மனுவில் குறிப்பிட்டிருந்தார். மேலும் இந்த சம்பவம் அரசியல் வட்டாரத்திலும் திரையுலகிலும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் ஜீவனாம்சம் கொடுத்து சங்கீதாவுக்கு விவாகரத்து வழங்க விஜயும் முடிவு செய்துள்ளதாக ஒரு தகவல் பரவி வருவது குறிப்பிடத்தக்கது.
