தஞ்சாவூரில் நடைபெற்ற திமுக இல்ல திருமண விழாவில் திமுக கட்சியின் தலைவர் மு.க ஸ்டாலின் கலந்துகொண்டு பேசினார். அவர் பேசியதாவது, எந்த ஒரு பணியும் செய்யாமல் இன்று இன்ஸ்டாகிராமில் குழந்தைகளை வைத்து வீட்டில் உள்ள அம்மா, அப்பா பாட்டி தாத்தா என அனைவரிடமும் தமிழக வெற்றிக்கழகம் பிரச்சாரம் செய்த ஆட்சியைப் பிடித்து விட்டது. இது நம்முடைய கண்ணுக்கு தெரியாமல் போய்விட்டது. எனவே இனிமேல் திமுகவின் பிரச்சாரம் மற்றும் தேர்தல் வியூகத்தை மாற்றி அமைக்க வேண்டும்.
இனிமேல் அனைவரும் உஷாராக இருக்க வேண்டும். தமிழகத்தில் திமுக திட்டங்கள் தற்போதும் தொடர்ந்து கொண்டு இருப்பதால் திமுக ஆட்சி தான் நடந்து கொண்டிருக்கிறது எனவே யாரும் வேதனைப்படக்கூடாது. அதன் பிறகு தமிழ்நாட்டில் ஒரு புதிய அரசு நடந்துள்ளது. அவர்கள் ஆட்சி நடத்த திமுக எந்த தொந்தரவும் கொடுக்காது. ஆனால் இயலாமையை மறைக்க அவதூறுகளைக் கொண்டு தாக்கினால் விளக்கம் அளிப்போம். மேலும் சமூக ஊடகங்களில் பொய்களை பரப்பினால் உண்மையை போட்டுடைப்போம் என்று எச்சரித்தார்.
