தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தலையொட்டி, முதியோர், மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்குப்பதிவு தொடங்கியது. துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் வீடுகளுக்கே சென்று அதிகாரிகள் தபால் வாக்குகளை சேகரிக்கின்றனர் . ஏப்.6 வரை 3 நாட்களுக்கு காலை 7 – மாலை 6 மணி வரை வீடு வீடாகச் சென்று தபால் வாக்கு சேகரிக்கப்பட உள்ளது. தபால் வாக்கு செலுத்த முடியாதவர்களுக்கு ஏப். 8ஆம் தேதி மீண்டும் வாய்ப்பு வழங்கப்படும்.