தெலங்கானா மற்றும் புதுச்சேரி ஆளுநர் பதவியை தமிழிசை நேற்று ராஜினாமா செய்வதாக குடியரசுத் தலைவருக்கும் கடிதம் அனுப்பி இருந்தார். அவரின் ராஜினாமாவை ஏற்று, தெலங்கானா & புதுச்சேரி ஆளுநர் பொறுப்பை சி.பி.ராதாகிருஷ்ணன் கூடுதலாக கவனிப்பார் என்று குடியரசுத் தலைவர் முர்மு அறிவித்துள்ளார். நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதால், தமிழிசை ராஜினாமா செய்தது குறிப்பிடத்தக்கது.