தமிழக முன்னாள் ஆளுநர் ஃபாத்திமா பீவி உடல் நல குறைவால் காலமானார். இவருக்கு வயது 96.. காலமான பாத்திமா பீவி உச்ச நீதிமன்றத்தில் நீதிபதியாக பதவி வகித்தவர் ஆவார். பாத்திமா பீவி உச்ச நீதிமன்றத்தின் முதல் பெண் நீதிபதி என்ற பெருமையையும், முதல் இஸ்லாமிய நீதிபதியாகவும் இருந்துள்ளார். தமிழகத்தின் 11வது ஆளுநராக கடந்த 1997 முதல் 2001 ஜூலை 3 வரை பாத்திமா பீவி பதவி வகித்தார்.கேரள மாநிலம் பத்தினம் திட்டாவை சேர்ந்த பாத்திமா பீவி 1989இல் உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார்..