தேசிய தேர்வு முகமை சார்பாக வருடத்திற்கு இரண்டு முறை நெட் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. 82 பாடங்களில் இந்த நெட் தேர்வு நடத்தப்படும் நிலையில் தேர்வுக்கான பாடத்திட்டத்தை புதுப்பிக்க இருப்பதாக யூசிஜி அறிவித்துள்ளது. மேலும் இந்த புதிய பாடத்திட்டத்தை அமைப்பதற்காக நிபுணர் குழு ஒன்றும் அமைக்கப்படும் என்று பல்கலைக்கழகம் மானிய குழு தலைவர் தெரிவித்துள்ளார். இவ்வாறு புதிய பாடத்திட்டம் அமல்படுத்தப்பட்ட பிறகு மாணவர்கள் தேர்வுக்கு தயாராக கால அவகாசம் வழங்கப்படும் எனவும் மாணவர்கள் தேர்வு குறித்து பயப்பட வேண்டாம் எனவும் கூறியுள்ளார்.