பாஜக எம்.எல்.ஏ. நயினார் நாகேந்திரனின் மகனும், தமிழக மாநில பாஜக இளைஞர் அணி துணைத் தலைவருமான நயினார் பாலாஜியின் ரூ.100 கோடி மதிப்பிலான பத்திரப்பதிவு ரத்து செய்யப்பட்டுள்ளது. சென்னை ஆற்காடு சாலையில் உள்ள சொத்து நெல்லை ராதாபுரம் சார்பதிவாளர் அலுவலகத்தில் முறைக்கேடாக பத்திரப்பதிவு நடந்துள்ளதாக அறப்போர் இயக்கம் புகார் கூறியிருந்த நிலையில், நெல்லை மண்டல பதிவுத்துறை துணைத் தலைவர் ரத்து செய்தார்.