தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் களம்  சூடுபிடிக்க தொடங்கியுள்ள நிலையில் இன்று வாக்கு எண்ணிக்கை காலை 8:00 மணி முதல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கடந்த ஏப்ரல் 23ஆம்தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. இதேபோன்று அசாம், மேற்குவங்கம் மற்றும் கேரளா ஆகிய மாநிலங்களிலும் தேர்தல் நடைபெற்ற நிலையில் இன்று மொத்தமாக வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. இந்த நிலையில் இன்று காலை முதல் தொடர்ந்து தமிழக வெற்றிக்கழகம் பல தொகுதிகளில் முன்னிலையில் இருக்கிறது.

தமிழகத்தில் தற்போது வரை அதாவது பகல் 12:30 மணி நிலவரப்படி தமிழக வெற்றிக்கழகம் 109 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. அதன் பிறகு அதிமுக 68 இடங்களிலும் திமுக 57 இடங்களிலும் முன்னிலை வகிக்கிறது. இந்த நிலையில் தமிழக தேர்தலில் தற்போது முதல் வெற்றி பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் அதன்படி மதுரை மேலூர் தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் முன்னாள் எம்பி விஸ்வநாதன் போட்டியிட நிலையில் தற்போது அவர் அந்த தொகுதியில் வெற்றி வாகை சூடியுள்ளார். அதிமுக வேட்பாளர் பெரியபுள்ளானை 2730 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளார்.