தமிழகத்தில் முதலமைச்சர் ஆக விஜய் பொறுப்பேற்ற பிறகு நிதிநிலை குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடப்படும் என்று அறிவித்திருந்தார். அதன்படி நிதியமைச்சர் மரிய வில்சன் இன்று மாலை நிதிநிலை குறித்த வெள்ளை அறிக்கை வெளியிடுவதாக அறிவித்திருந்த நிலையில் தற்போது வெள்ளை அறிக்கையை வெளியிட்டார்.

மேலும் அந்த வெள்ளை அறிக்கை தமிழ் நாட்டின் கடன் 5 லட்சம் கோடியிலிருந்து 13.18 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது எனவும் மாநிலத்தின் சொந்த வரி வருவாய் வரலாறு காணாத வகையில் வீழ்ச்சி அடைந்துள்ளது என்றும் கூறினார். மேலும் ஒரு காலத்தில் இந்தியாவில் அதிக வருவாய் கொண்ட மாநிலங்களில் ஒன்றாக தமிழ்நாடு இருந்தது என்றும் ஆனால் திமுக ஆட்சியில் மாநிலத்தின் சொந்த வரி வருவாயே வரலாறு காணாத வகையில் வீழ்ச்சி அடைந்துள்ளது என்று குறிப்பிட்டார்.