தமிழகத்தில் பொங்கல் பரிசாக ரேஷன் கடைகளில் 3000 ரூபாய் வழங்கப்படுகிறது. 2.22 கோடி ரேஷன் அட்டைதாரர்கள் மற்றும் இலங்கை முகாம்களில் வசிக்கும் தமிழர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் ரொக்க பணம் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்திருந்த நிலையில் கடந்த 8-ம் தேதி முதல் ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசு தொகுப்பு விநியோகம் செய்யப்படுகிறது. இதனை நாளை வரை பெற்றுக் கொள்ளலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
இந்த நிலையில் முதியவர்களுக்கு சரியாக கைரேகை பதிவு செய்ய முடியாததால் பொங்கல் பரிசு வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்த நிலையில் தற்போது கண் கருவிழி பதிவு மூலமாகவே பொங்கல் பரிசு தொகையை வழங்கலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. மேலும் கைரேகை சரியாக பதிவு செய்யாத பட்சத்தில் கண் கருவிழி பதிவு மூலம் பொங்கல் பரிசு தொகுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கலாம் என கூட்டுறவு துறை அறிவித்துள்ளது.
