தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை குற்றங்கள் அதிகரித்து வருவதாக கூறப்படும் நிலையில் தற்போது பெண் போலீசை அதிகாரி ஒருவரே அலுவலகத்தில் வைத்து பலாத்காரம் செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது கோயம்புத்தூரில் 45 வயது பெண் போலீஸ் ஒருவரை உதவி காவல் ஆய்வாளர் புஷ்பா குமாரி என்பவர் போலீஸ் அதிகாரி செந்தில்குமார் அலுவல அறைக்கு அழைத்து சென்றுள்ளார்.
தன்னை அங்கு தனியாக விட்டு விட்டு செல்ல வேண்டாம் என்று அந்த பெண் போலீஸ் கெஞ்சிய நிலையிலும் அங்கிருந்து புஷ்பா குமாரி கிளம்பியதாகவும் பின்னர் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் அலுவலக அறையில் வைத்து அவரை பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் கூறப்படும் நிலையில் இது தொடர்பாக செந்தில்குமாரை சஸ்பெண்ட் செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.
பாலியல் வன்கொடுமை செய்த நிலையில் இது தொடர்பாக வெளியே சொல்லக்கூடாது என போலீஸ் அதிகாரி மிரட்டிய நிலையில் இதற்கு அந்த உதவி பெண் ஆய்வாளரும் உடந்தையாக இருந்துள்ளார் என்று கூறப்படுகிறது. இதன் காரணமாக செந்தில்குமார் மீது 10 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இவர் நேற்று இரவு கைது செய்யப்பட்டுள்ள நிலையில் உதவி ஆய்வாளர் புஷ்பா குமாரி மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் செந்தில்குமார் தமிழ்நாடு சிறப்பு காவல் படை கமாண்டோவாக பணிபுரிகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
