தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர் விஜய் இன்று தமிழகத்தின் முதலமைச்சர் ஆக பதவி ஏற்க உள்ளார். அவருடன் 9 அமைச்சர்களும் பதவியேற்க இருக்கிறார்கள். தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் நடிகர் விஜய் தலைமையிலான கட்சி 108 இடங்களில் வெற்றி பெற்ற நிலையில் பெரும்பான்மை கிடைக்காத நிலையில் பதவி ஏற்பு விழா தள்ளிப்போனது. இதனைத் தொடர்ந்து திமுக கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், கம்யூனிஸ்ட், முஸ்லிம் லீக் கட்சி மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி போன்றவைகள் ஆதரவு கொடுத்ததால் பெரும்பான்மை 120 ஆக உயர்ந்தது. இதனைத் தொடர்ந்து நேரு ஸ்டேடியத்தில் இன்று முதலமைச்சர் பதவி விழா பிரம்மாண்டமாக நடைபெற்ற நிலையில் முதலமைச்சராக விஜய் பொறுப்பேற்றுக்கொண்டார். அவரைத் தொடர்ந்து ஒன்பது அமைச்சர்களும் பொறுப்பேற்றனர்.
அதன்படி செங்கோட்டையன், ராஜ்குமார், அருண் ராஜ், வெங்கட்ரமணன், ஆதவ் அர்ஜுனா, டாக்டர் பிரபு மற்றும் கீர்த்தனா, புஸ்ஸி ஆனந்த் உள்ளிட்டோர் அமைச்சர்களாக பதவி ஏற்றிக்கொண்டனர். முதலமைச்சராக பொறுப்பேற்றதும் 200 யூனிட் மின்சாரம் இலவசம் சிங்கப்பெண் சிறப்புப்படை போதை ஒழிப்பு படையை ஆகிய திட்டங்களுக்கு முதல்வர் விஜய் கையெழுத்திட்டார். இதனைத் தொடர்ந்து தலைமைச் செயலகத்திற்கு சென்ற அவர் தன்னுடைய பணிகளை மேற்கொள்ள ஆரம்பித்தார். இந்த நிலையில் தமிழக சட்டசபை நாளை காலை 11 மணிக்கு கூட இருப்பதாக அறிவிப்பு வெளிவந்துள்ளது. தற்காலிக சபாநாயகராக சோழவந்தான் தொகுதி எம்எல்ஏ கருப்பையா தேர்வு செய்யப்பட்டுள்ளார். நாளை அனைத்து எம்எல்ஏக்களும் சட்டசபையில் பதவிப்பிரமாணம் செய்ய இருக்கும் நிலையில் நாளை மறுநாள் சட்டசபையில் சபாநாயகர் தேர்வு செய்யப்பட்டு தமிழக வெற்றிக்கழகம் தன்னுடைய பெரும்பான்மையின் நிரூபிக்க இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
