
புதுக்கோட்டை மாவட்டத்திற்கு நாளை உள்ளூர் விடுமுறை வழங்கி மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். அதாவது புதுக்கோட்டை மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற திருவப்பூர் முத்துமாரியம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் திருவிழா மிக பிரம்மாண்டமாக நடைபெறும். இந்த திருவிழாவில் உள்ளூர் மட்டுமின்றி வெளியூர்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொள்வார்கள்.
இதன் காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் மாவட்ட ஆட்சியர் உள்ளூர் விடுமுறை வழங்கி உத்தரவிட்டுள்ளார். இதன் காரணமாக நாளை பள்ளி கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்கள் போன்றவைகள் செயல்படாது. அதே நேரத்தில் பொது தேர்வுகள் இருந்தால் அவை வழக்கம் போல் நடைபெறும். மேலும் இந்த விடுமுறையை ஈடு செய்வதற்காக மார்ச் 15ஆம் தேதி வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.