தமிழ்நாட்டில் வருகிற 31ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட இருக்கும் நிலையில் தீபாவளி போனஸ் குறித்த அறிவிப்புகளை முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டு வருகிறார். முன்னதாக அரசு ஊழியர்களை மகிழ்ச்சிப்படுத்தும் விதமாக 3 சதவீதம் வரை அகவிலைப்படி உயர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டது. அதன் பிறகு ரேஷன் கடை ஊழியர்கள் மற்றும் டாஸ்மாக் கடை ஊழியர்களுக்கு 20% வரை போனஸ் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. பின்னர் இன்று காலை சென்னையில் மெட்ரோ ரயில்வே நிலையத்தில் பணிபுரியும் Non executive ஊழியர்களுக்கு 13,000 வரையில் தீபாவளி போனஸ் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து தமிழகத்தில் உள்ள சர்க்கரை மற்றும் கூட்டுறவு அலைகளில் பணிபுரியும் ஊழியர்களுக்கு 10 சதவீதம் முதல் 20 சதவீதம் வரை தீபாவளி போனஸ் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து தற்போது தமிழ்நாட்டின் தேயிலைத் தோட்ட தொழிலாளர்களுக்கு தீபாவளி போனஸ் குறித்த அறிவிப்பை முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ளார். மேலும் அதன்படி வனத்துறையின் நிர்வாகக் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து தேயிலை பணியாளர்களுக்கும் 20% போனஸ் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக போக்குவரத்து துறை ஊழியர்களுக்கு தீபாவளி போனசை அரசு வழங்கியது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.