இந்திய தேர்தல் ஆணையம் இன்று தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, மேற்குவங்க மற்றும் அசாம் ஆகிய மாநிலங்களின் சட்டப்பேரவை தேர்தல் தேதியை அறிவிப்பதாக கூறிய நிலையில் தற்போது அறிவிப்பு வெளிவந்துள்ளது. அதன்படி தலைமை தேர்தல் அதிகாரி ஞானேஷ்குமார் இது குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
அவர் கூறியதாவது, 5 மாநிலங்களில் மொத்தம் 17.4 கோடி வாக்காளர்கள் இருக்கிறார்கள். மொத்தமாக 284 தொகுதிகளில் 2.19 லட்சம் வாக்கு சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஐந்து மாநிலங்களின் தேர்தல் முடிவுகள் மே 4-ம் தேதி வெளியாகும். அதாவது தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி மற்றும் அசாம் ஆகிய மாநிலங்களில் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறும் எனவும் மேற்கு வங்கத்தில் மட்டும் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெறும் என்றும் அறிவித்தார்.
மேலும் தமிழ்நாட்டிற்கு ஏப்ரல் 23ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என்றும் அறிவித்தார். இதேபோன்று புதுச்சேரியில் ஏப்ரல் 9-ம் தேதி தேர்தல் நடைபெறும் என்றும் மே நான்காம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதே போன்ற அசாம் மாநிலத்திலும் ஏப்ரல் 9-ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெறும். அதன் பிறகு கேரளாவிலும் ஏப்ரல் 9-ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. மேலும் மேற்குவங்க மாநிலத்தில் ஏப்ரல் 23ஆம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. அனைத்து மாநிலங்களிலும் ஒரே கட்டமாக மே நான்காம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.
