தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் களம்  சூடுபிடிக்க தொடங்கியுள்ள நிலையில் இன்று வாக்கு எண்ணிக்கை காலை 8:00 மணி முதல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கடந்த ஏப்ரல் 23ஆம்தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. இதேபோன்று அசாம், மேற்குவங்கம் மற்றும் கேரளா ஆகிய மாநிலங்களிலும் தேர்தல் நடைபெற்ற நிலையில் இன்று மொத்தமாக வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. இந்த நிலையில் இன்று காலை முதல் தொடர்ந்து தமிழக வெற்றிக்கழகம் பல தொகுதிகளில் முன்னிலையில் இருக்கிறது.

இந்த நிலையில் தற்போது தமிழக வெற்றிக்கழகத்தின் வேட்பாளர்கள் அடுத்தடுத்து வெற்றி வாகை சூடி வருகிறார்கள். குறிப்பாக சென்னையில் மட்டுமே தமிழக வெற்றிக்கழகத்தினர் பல இடங்களை கைப்பற்றுகிறார்கள். சென்னை மயிலாப்பூரில், திருவிக நகர் என பல பகுதிகளில் வெற்றி பெற்ற நிலையில் தற்போது வேளச்சேரியில் தமிழக வெற்றிக் கழகத்தின் வேட்பாளர் குமார் அமோக வெற்றி பெற்றுள்ளார். அதன் பிறகு அறந்தாங்கி தொகுதியில் பர்வேஸ் வெற்றி பெற்றுள்ளார் தமிழக வெற்றிக்கழகத்தின் வேட்பாளர் இவர். மேலும் மதுரை மத்திய தொகுதியில் தமிழக வெற்றி கழகத்தின் வேட்பாளர் முஸ்தபா வெற்றி வாகை சூடியுள்ளார்.