சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வரலாறு காணாத புதிய உச்சமாக இன்று ஒரே நாளில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை அதிகரித்துள்ளது. அதாவது ஒரு கிராம் 1190 ரூபாய் வரையில் அதிகரித்து 16,800 ரூபாய்க்கும், ஒரு சவரன் 9,520 ரூபாய் வரையில் அதிகரித்து 1,34,400 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
இது வரலாறில் இல்லாத அளவிற்கு ஒரு புதிய உச்சமாக கருதப்படும் நிலையில் நகை பிரியர்கள் மத்தியில் பேரஅதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதேபோன்று 24 கேரட் தூய தங்கத்தின் விலையும் அதிகரித்து ஒரு கிராம் 18,327 ரூபாய்க்கும், ஒரு சவரன் 1,46,616 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
மேலும் வெள்ளி விலையும் கிராமுக்கு 25 ரூபாய் வரையில் அதிகரித்து ஒரு கிராம் 425 ரூபாய்க்கும் ஒரு கிலோ வெள்ளி 25,000 ரூபாய் வரையில் அதிகரித்து 4,25,000 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
