சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை தொடர்ந்து வரலாறு காணாத அளவுக்கு உச்சத்தை எட்டி வருகிறது. அந்த வகையில் நேற்று ஒரே நாளில் தங்கம் விலை இருமுறை உயர்ந்த நிலையில் தற்போது மீண்டும் உயர்ந்துள்ளது. அதன்படி இன்று 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 600 ரூபாய் வரையில் அதிகரித்து ஒரு சவரன் 89,600 ரூபாய்க்கும், ஒரு கிராம் 11200 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

இதேபோன்று 24 கேரட் தூய தங்கத்தின் விலையும் அதிகரித்து ஒரு கிராம் 12218 ரூபாய்க்கும், ஒரு சவரன் 97744 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் வெள்ளி விலையில் மாற்றம் இன்றி ஒரு கிராம் 167 ரூபாய்க்கும், ஒரு கிலோ வெள்ளி 167000 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.