சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாகவே அதிகரித்து வருகிறது. அதன்படி கடந்த 3 நாட்களில் தங்கம் விலை 4160 ரூபாய் வரையில் அதிகரித்த நிலையில் இன்று சவரனுக்கு 200 ரூபாய் வரையில் உயர்ந்துள்ளது. இதனால் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராம் 8770 ரூபாய்க்கும், ஒரு சவரன் 70160 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
இதேபோன்று 24 கேரட் தூய தங்கத்தின் விலையும் உயர்ந்து ஒரு கிராம் 9567 ரூபாய்க்கும், ஒரு சவரன் 76536 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் வெள்ளி விலையும் கிராமுக்கு இரண்டு ரூபாய் வரையில் உயர்ந்து ஒரு கிராம் 110 ரூபாய்க்கும், ஒரு சவரன் ஒரு லட்சத்தி பத்தாயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
