சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை கடந்த சில தினங்களாக குறைந்து வரும் நிலையில் இன்றும் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ. 7600 வரையில் குறைந்துள்ளது. இதனால் ஒரு சவரன் 1,11,600 ரூபாய்க்கும், ஒரு கிராம் 13,950 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
இதேபோன்று 24 கேரட் தூய தங்கத்தின் விலையும் குறைந்து ஒரு கிராம் 15,218 ரூபாய்க்கும், ஒரு சவரன் 1,21,744 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் வெள்ளி விலையும் என்று ஒரே நாளில் கிராமுக்கு ₹20 வரையில் குறைந்து ஒரு கிராம் 300 ரூபாய்க்கும் ஒரு கிலோ வெள்ளி 3,00,000 லட்சம் ரூபாய் விற்பனை செய்யப்படுகிறது.
