டெல்லி ஜவஹர்லால் பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவர் உமர் காலித். இவர் டெல்லி கலவர வழக்கில் கைது செய்யப்பட்டு கடந்த 2020 ஆம் ஆண்டு முதல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவர் மீது வன்முறையை தூண்டியதாக இரண்டு வழக்குகள் பதியப்பட்டு சிறையில் இருக்கும் நிலையில் பலமுறை அவரது ஜாமீன் மனுக்கள் நிராகரிக்கப்பட்டது.
இந்த நிலையில் தற்போது அவருக்கு ஜாமீன் வழங்கி நீதிமன்றம் உத்தரவு வழங்கியுள்ளது. அதன்படி இரண்டு வார காலம் இடைக்கால ஜாமின் வழங்கப்பட்டுள்ளது. மேலும் டிசம்பர் 16ஆம் தேதி முதல் 29ஆம் தேதி வரை குடும்ப திருமண நிகழ்ச்சியில் பங்கேற்க அவருக்கு அனுமதி வழங்கப்பட்டு ஜாமின் வழங்கப்பட்டுள்ளது.
