தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் தொங்கு சட்டசபை ஏற்பட்ட நிலையில் தமிழக வெற்றி கழகம் காங்கிரஸ் விசிக கம்யூனிஸ்ட் முஸ்லீம் லீக் கட்சிகளின் ஆதரவோடு ஆட்சி அமைத்தது. அதே நேரத்தில் அதிமுகவில் ஒரு பிரிவினர் மற்றும் அமமுக கட்சியின் சார்பில் வென்ற மன்னார்குடி எம்எல்ஏ காமராஜ் ஆகியோரும் தமிழக வெற்றி கழகத்திற்கு ஆதரவு கொடுப்பதாக அறிவித்தனர். இதனைத் தொடர்ந்து காமராஜரை கட்சியிலிருந்து நீக்கி டிடிவி தினகரன் அறிக்கை வெளியிட்டார். இதனைத் தொடர்ந்து தற்போது அமமுக கட்சியில் இருந்து பலர் விலகி வருகிறார்கள்.
அந்த வகையில் மத்திய சென்னை கிழக்கு மாவட்டச் செயலாளர் சேப்பாக்கம் ராஜேந்திரன், கட்சியில் இருந்து விலகியுள்ளார். கட்சி ஆரம்பித்த நோக்கத்தை மறந்து எடப்பாடி பழனிச்சாமிக்கு துதி பாடும் உங்களது சுயநல போக்கால் விலகுகிறேன் என டிடிவி தினகரனுக்கு கடிதம் எழுதியுள்ளார். மேலும் திருச்சி மாவட்டச் செயலாளர் செந்தில்நாதன், ராமநாதபுரம் மாவட்டச் செயலாளர் முருகன் ஆகியோரும் கட்சியில் இருந்து விலகியுள்ளனர்.
