டிச.26ல் அதிமுக பொதுக்குழு, செயற்குழு கூட்டம் நடைபெற உள்ளதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் இபிஎஸ் அறிவித்துள்ளார். சென்னை வானகரத்தில் டிச.26ம் தேதி காலை 10.35 மணிக்கு அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் தலைமையில் பொதுக்குழு, செயற்குழு கூட்டம் நடைபெறும் என்று கூறியுள்ளார். மக்களவை தேர்தல் நெருங்கி வருவதையொட்டி, கூட்டணியை பலப்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்பட உள்ளது