மதுப்பாட்டில்கள் திரும்பப் பெறும் திட்டத்திற்கு எதிராக, டாஸ்மாக் ஊழியர்கள் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதில், நாள்தோறும் மதியம் 12 மணிக்கு திறக்கப்படும் டாஸ்மாக் கடைகள், இன்று (செப்.1) காஞ்சிபுரம், தஞ்சாவூர் உள்ளிட்ட பகுதிகளில் திறக்கப்படாமல் உள்ளது.
டாஸ்மாக் ஊழியர்கள் சங்கம், “காலி பாட்டில்களை திரும்பப் பெறும் திட்டத்திற்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்த சூழலில் திடீரென டாஸ்மாக் கடைகள் திறக்கப்படாமல் போனது மதுப்பிரியர்களிடையே பெரும் சோகத்தையும் குழப்பத்தையும் ஏற்படுத்தியுள்ளது. பலரும் கடைகள் முன் குவிந்து, “எப்போது திறக்கும்?” என தவித்த காட்சிகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
