சென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக கே. ஆர். ஸ்ரீ ராம் இருந்த நிலையில் தற்போது அவரை ராஜஸ்தான் மாநில உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமித்துள்ளனர். இதே போன்று ராஜஸ்தான் உயர்நீதிமன்ற நீதிபதியாக இருந்த நீதிபதி மணீந்திர மோகன் ஸ்ரீ வஸ்தவா சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

மேலும் இதேபோன்று மத்திய பிரதேசம், கர்நாடகா, கவுகாத்தி, பாட்னா, ஜார்கண்ட், திரிபுரா மற்றும் தெலுங்கானா ஆகிய உயர் நீதிமன்றங்களுக்கும் புதிய நீதிபதிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
