அதிமுக கட்சியில் பிரிந்து சென்றவர்கள் மீண்டும் ஒன்று சேர வேண்டும் என முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கூறியதால் கட்சிப் பதவியில் இருந்து நீக்கினார் எடப்பாடி பழனிசாமி. கட்சிப் பொறுப்புகள்  பறிக்கப்பட்ட நிலையில் தொடர்ந்து செங்கோட்டையன் கட்சியில் மீண்டும் பிரிந்து சென்றவர்களை இணைக்க வேண்டும் என வலியுறுத்தி வருகிறார். ஆனால் எடப்பாடி பழனிச்சாமி பிரிந்து சென்றவர்களை மீண்டும் ஒன்று சேர்க்க முடியாது என்பதில் திட்டவட்டமாக இருப்பதாக கூறப்படுகிறது. அதாவது ஜெயலலிதா மறைவுக்கு பிறகு தொடர்ந்து அதிமுக தோல்வியை சந்தித்து வருவதால் மீண்டும் அதிமுக ஒன்று சேர்ந்தால் மட்டும்தான் அடுத்த தேர்தலில் ஜெயிக்க முடியும் என செங்கோட்டையன் கூறுகிறார். அதோடு எடப்பாடி பழனிச்சாமிக்கு அவர் 10 நாட்கள் கெடு விதித்தார்.

இதனால்தான் செங்கோட்டையன் பதவி பறிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து செங்கோட்டையன் ஆதரவாளர்கள் பலர் கட்சியிலிருந்து விலகிய நிலையில் இன்று எடப்பாடி பழனிச்சாமி செங்கோட்டையன் தொகுதியான கோபிக்கு சென்றுள்ளார். ஏற்கனவே மாவட்ட செயலாளர் பொறுப்பிலிருந்து செங்கோட்டையன் நீக்கப்பட்ட நிலையில் அவருக்கு பதிலாக ஏகே செல்வராஜ் அந்த பொறுப்பில் நியமிக்கப்பட்டார். தற்போது கோபிக்கு சென்ற எடப்பாடி பழனிச்சாமிக்கு அதிமுகவினர் ஒன்று கூடி உற்சாக வரவேற்பு கொடுத்தனர். செங்கோட்டையன் கோட்டையான கோபியில் ஏகே செல்வராஜ் பெரும்படையை திரட்டி எடப்பாடி பழனிச்சாமிக்கு உற்சாக வரவேற்பு கொடுத்தது கட்சியில் அவருக்கு பதில் அளித்து நான் தான் என்பதை நிரூபிக்கும் வகையில் செயல்பட்டுள்ளார். மேலும் இதனை பார்த்து எடப்பாடி பழனிச்சாமி மிகவும் மகிழ்ச்சி அடைந்ததாக கூறப்படுகிறது.