2025-ஆம் ஆண்டு ஆசிய கோப்பையின் மிகச்சிறந்த ஆட்டமாகக் கருதப்படும் இந்தியா-இலங்கை மோதல், ரசிகர்களுக்கு பரபரப்பை கட்டியெழுப்பியது.

முதலில் ஆடிய  இந்திய அணி, அபிஷேக் சர்மா துவக்கத்தில் காட்டிய அதிரடியும், இறுதியில் திலக் வர்மா மற்றும் சஞ்சு சாம்சனின் பொறுப்பான ஆட்டத்தால் 202 ரன்கள் குவித்தது. பதிலுக்கு களமிறங்கிய இலங்கை அணியின் பதும் நிஷங்கா இந்திய பந்துவீச்சை நேர்த்தியாகச் சமாளித்து சதமடித்தார்.

அவரது அருமையான ஆட்டத்தால் இலங்கை வெற்றிக்கு நெருங்கியது. ஆனால், கடைசி ஓவரில் விக்கெட்டுகள் வீழ்ந்ததால் போட்டி டிராவாக முடிந்தது.

இதைத் தொடர்ந்து நடைபெற்ற சூப்பர் ஓவரில், இந்திய பந்துவீச்சாளர்கள் கம்பீரமாக முத்திரை பதித்தனர். முதல் பந்திலேயே நிஷங்காவை வெளியேற்றிய இந்தியா, ஐந்தாவது பந்தில் இரண்டாவது விக்கெட்டையும் வீழ்த்தியது. இதனால் இந்தியாவுக்கு வெற்றிக்காக வெறும் 3 ரன்கள் மட்டுமே இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

சூப்பர் ஓவரில் சூர்யகுமார் யாதவ் மற்றும் சுப்மன் கில் களமிறங்கி, முதல் பந்திலேயே 3 ரன்கள் எடுத்ததால் இந்தியா வெற்றியை கைப்பற்றியது. இது தொடரிலேயே மிகச்சிறந்த ஆட்டமாகவும், இந்திய அணிக்கான உன்னத வெற்றியாகவும் பாராட்டப்படுகிறது.