2025 ஆசிய கோப்பை தொடரில், இந்தியா – இலங்கை அணிகள் மோதிய சூப்பர்-4 சுற்றுப் போட்டி அதிரடியாக சூப்பர் ஓவருக்கு சென்றது. இந்தச் சூப்பர் ஓவரில் நடந்த ஒரு சம்பவம் தற்போது ரசிகர்களிடம் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

இலங்கை அணியின் கேப்டன் தசுன் சனகா, 4வது பந்தில் ரன் எடுக்க முயன்றபோது க்ரீஸை விட்டு வெளியே சென்றார் ரன் எடுப்பதற்காக அப்போது சுதாரித்து கொண்ட   இந்திய விக்கெட் கீப்பர் சஞ்சு சாம்சன், நேரடி த்ரோவால் ஸ்டம்ப்ஸை அடித்தார். ஆனால், இது ரன் அவுட் போலத் தெரிந்தாலும், சனகாவை ‘நாட் அவுட்’ என கூறியதால் பெரும் குழப்பம் ஏற்பட்டது.

“>

 

இதற்கான காரணம், அந்த பந்தில் இந்திய பவுலர் அர்ஷதீப் சிங், சனகாவை கேட்ச் அவுட் என கேட்டு அம்பையரிடம் அபீல் செய்தார். அம்பையர் உடனே ‘அவுட்’ என கூறினார். இலங்கை அணி உடனே DRS எடுத்தது. மூன்றாவது அம்பையர், பந்து பேட்டில் படவில்லை என்பதை உறுதி செய்தார். எனவே, அவுட் என்பது நீக்கப்பட்டது.

ஆனால் அம்பையர் முதலில் “அவுட்” என கூறிய தருணத்திலேயே அந்த பந்து “டெட் பால்” என கணிக்கப்படுகிறது. அதன்பிறகு நடந்த ரன் அவுட் நியாயமாக ஏற்கப்பட முடியாது என்பதுதான் ஐசிசியின் விதி.

இதுபோன்ற “டெட் பால்” விதி, பலருக்கும் புதிதாகவே இருந்ததால் இந்த சம்பவம் ரசிகர்களிடையே விவாதத்தை உருவாக்கியுள்ளது. சனகா அடுத்த பந்திலேயே மீண்டும் அவுட் ஆனதால் விளைவு மாற்றமில்லை என்றாலும், இது போட்டியின் திருப்பத்தை மாற்றக்கூடிய தருணமாக இருந்திருக்கலாம் என்பதே ரசிகர்கள் கருத்து.

உலக அளவில் கிரிக்கெட் விதிகளை பற்றிய விழிப்புணர்வு அவசியம் என்பதை இந்த சம்பவம் மீண்டும் நினைவூட்டுகிறது.