தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே தக்காளி மற்றும் காய்கறிகள் என அனைத்து மளிகை பொருட்களின் விலையும் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனால் மக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ள நிலையில் தக்காளியை தொடர்ந்து தற்போது சின்ன வெங்காயமும், கிடுகிடுவென உயர்ந்துள்ளது.

ஒரு கிலோ சின்ன வெங்காயம் நேற்று 140 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் இன்று ஒரே நாளில் அறுபது ரூபாய் உயர்ந்த 200 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதே சமயம் தக்காளி விலை 10 ரூபாய் குறைந்து 130 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. மற்ற காய்கறிகளின் விலையும் கணிசமாக அதிகரித்துள்ளதால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.