ஆந்திரா மாநிலம் காக்கிநாடா அருகே ஏற்பட்ட சாலை விபத்தில் பரிதாபமாக 6 பேர் பலியாகியுள்ளனர். தல்லாரேவு புறவழிச்சாலையில் சென்று கொண்டிருந்த ஆட்டோ மீது பேருந்து ஒன்று வேகமாக மோதியுள்ளது. இந்த விபத்தில் 6 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். பேருந்து அதிவேகத்தில் சென்றதால் ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழந்து விபத்து நடந்துள்ளதாக போலீஸாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.