தமிழக முதல்வராக விஜய் பொறுப்பேற்ற நிலையில் திருச்சி கிழக்கு தொகுதியில் தனக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி சொல்வதற்காக சென்றுள்ளார். அங்கு நடைபெறும் பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டுள்ள முதலமைச்சர் விஜய் பல்வேறு விஷயங்களுக்கும் தன் மீதான விமர்சனங்களுக்கும் பதிலடி கொடுத்து வருகிறார். அந்த வகையில் நடிகர் விஜய் முதல்வராக பதவியேற்றது முதல் தற்போது வரை கருப்பு கலர் கோட் சூட் மட்டுமே அணிகிறார்.
இது தொடர்பாக பல்வேறு விமர்சனங்களும் யூகங்களும் இருக்கும் நிலையில் இதற்கு பதில் அளித்து பேசிய விஜய் எல்லாவற்றிலும் பிளாக் அண்ட் வொயிட்டாக இருப்பேன் என்பதற்காக தான் இந்த கோட் சூட் அணிவதாக கூறினார். மேலும் 6 மாதங்கள் வரை அமைதியாக இருப்போம் என்று கூறியவர்களால் ஆறு நாட்கள் கூட அமைதியாக இருக்க முடியவில்லை எனவும் எதிர்கட்சியான திமுகவை மறைமுகமாக சாடினார்.
