அதிமுக கூட்டணியில் பாஜக இல்லை என ஜெயக்குமார் அறிவித்து அரசியலில் புதிய புயலை கிளப்பினார். இதனால், அதிமுக-பாஜக இடையே இருந்த மோதல் பூதாகரமாக வெடித்தது. இந்நிலையில், கூட்டணி நிலைப்பாட்டை தலைமை ஏற்கெனவே கூறிவிட்ட நிலையில், இனிமேல் யாரும் கூட்டணி குறித்தோ, பாஜக குறித்தோ கருத்து கூறக்கூடாது என இபிஎஸ் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார். இதன்மூலம் பாஜக-அதிமுக கூட்டணி தொடர்வதுஉறுதியாகியுள்ளது