தமிழகத்தில் விவசாயிகளின் நலனைக் கருத்தில் கொண்டு, நெல் கொள்முதல் ஆதார விலை உயர்த்தப்பட்டுள்ளதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். அவரது அறிவிப்பின் படி, இனி சாதாரண ரக நெல் ஒரு குவிண்டாலுக்கு ரூ.2,500க்கும், சன்ன ரக நெல் ஒரு குவிண்டாலுக்கு ரூ.2,545க்கும் கொள்முதல் செய்யப்படும்.

இந்த புதிய ஆதார விலை உயர்வு வரும் செப்டம்பர் 1 முதல் 2026 ஆகஸ்ட் 31 வரை அமல்படுத்தப்படும் எனவும், இதன் மூலம் லட்சக்கணக்கான விவசாயிகள் நேரடி பலன் பெறுவார்கள் என்றும் முதல்வர் தெரிவித்துள்ளார். விவசாயிகளின் வருமானத்தை உயர்த்தும் நோக்கில் எடுக்கப்பட்ட இந்த முடிவு, மாநிலம் முழுவதும் விவசாயிகள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.