ஆகஸ்ட் மாத தொடக்கத்தில் இருந்து தங்கம் விலை ஏற்றத்தாழ்வுகளைக் கண்டுவரும் நிலையில், இன்று (ஆகஸ்ட் 11) விலையில் பெரிய அளவில் சரிவு ஏற்பட்டுள்ளது. கடந்த ஆகஸ்ட் 9ஆம் தேதி 22 காரட் தங்கம் கிராமுக்கு ரூ.25 குறைந்து ரூ.9,445க்கும், சவரனுக்கு ரூ.200 குறைந்து ரூ.75,560க்கும் விற்பனை செய்யப்பட்டது.
நேற்று 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு 560 ரூபாய் குறைந்த நிலையில் 2-வது நாளாக இன்றும் தங்கம் விலை குறைந்துள்ளது. அந்த வகையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சரவணனுக்கு 640 குறைந்து 74, 360 ரூபாய்க்கும், ஒரு கிராம் 80 ரூபாய் குறைந்து 9295 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
இதே போல வெள்ளி விலை கிராமுக்கு ஒரு ரூபாய் குறைந்து 126 ரூபாய்க்கும், ஒரு கிலோ 1,26,000 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
