சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை அதிரடியாக குறைந்துள்ளது. அதன்படி இன்று 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 3200 ரூபாய் வரையில் குறைந்து ஒரு சவரன் 1,10,400 ரூபாய்க்கும், ஒரு கிராம் 13,800 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
இதேபோன்று 24 கேரட் தூய தங்கத்தின் விலையும் குறைந்து ஒரு கிராம் 15,055 ரூபாய்க்கும், ஒரு சவரன் 1,20,440 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் வெள்ளி விலையும் இன்று கிராமுக்கு 10 ரூபாய் வரையில் குறைந்து ஒரு கிராம் 260 ரூபாய்க்கும், ஒரு கிலோ வெள்ளி 2,60,000 ரூபாய் விற்பனை செய்யப்படுகிறது.
