சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வந்த நிலையில் இன்று விலை குறைந்துள்ளது. அதன்படி இன்று 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 640 வரையில் குறைந்து ஒரு சவரன் 1,04,160 ரூபாய்க்கும், ஒரு கிராம் 13,020 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

இதேபோன்று 24 கேரட் தூய தங்கத்தின் விலையும் குறைந்து ஒரு கிராம் 14,203 ரூபாய்க்கும், ஒரு சவரன் 1,13,624 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் வெள்ளி விலையும் இன்று கிராமுக்கு 4 ரூபாய் குறைந்து ஒரு கிராம் 281 ரூபாய்க்கும், ஒரு கிலோ வெள்ளி 2,81,000 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.