அதிமுக கட்சியின் முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் கட்சியின் பிரிவுக்கு பிறகு ஓபிஎஸ் அணியில் இணைந்தார். ஓபிஎஸ் இன்னும் தன்னுடைய கூட்டணி முடிவை அறிவிக்காத நிலையில் தை மாதம் முடிவதற்குள் தன் முடிவை தெரிவிப்பதாக கூறியுள்ளார். இதற்கிடையில் ஓபிஎஸ் அணியில் இருந்து பல முக்கிய நிர்வாகிகள் விலகி மாற்றுக் கட்சி இணைந்து வருகின்றனர்.
அந்த வகையில் ஒரத்தநாடு தொகுதி எம்எல்ஏவாக இருந்த வைத்த வைத்திலிங்கம் தன்னுடைய பதவியை ராஜினாமா செய்துவிட்டு தன்னுடைய மகன் பிரபுவுடன் திமுகவில் இணைந்தார். இந்த நிலையில் வைத்திலிங்கத்தின் ஆதரவாளர்கள் இன்று குடியரசு தின விழாவில் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர். அதன்படி சுமார் 10,000 பேர் இன்று ஒரே நாளில் திமுகவில் இணைந்த நிலையில் அவர்களை கட்சித் துண்டை போர்த்தி முதல்வர் ஸ்டாலின் வரவேற்றார். அதிமுக வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது.
