திமுகவின் நீண்ட கால உறுப்பினரும், தொமுச முன்னாள் தலைவருமான இரெ.கோவிந்தசாமி காலமானார். திமுக தொழிற்சங்கமான தொமுச பேரவையின் அதிகாரப்பூர்வ மாத இதழ் ‘உழைப்பாளி’யின் ஆசிரியராகவும் அவர் பணியாற்றியுள்ளார். அவரது மறைவுக்கு திமுக முன்னாள் எம்.பி. சண்முகம் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். சென்னை மேற்குத் தாம்பரத்தில் உள்ள அவரது இல்லத்தில், உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
