சுதந்திர தின (ஆகஸ்ட் 15) விடுமுறையை முன்னிட்டு வரும் வெள்ளிக்கிழமையுடன் (விடுமுறை) சேர்ந்து சனி, ஞாயிறு வார இறுதியிலும் அதிக பயணிகள் கூடும் நிலையில், கூட்ட நெரிசலை சமாளிக்க தெற்கு ரயில்வே 4 சிறப்பு ரயில்களை இயக்கவுள்ளதாக அறிவித்துள்ளது. இந்த ரயில்களுக்கான ஆன்லைன் முன்பதிவு இன்று (ஆகஸ்ட் 8) காலை 8 மணி முதல் தொடங்கும்.
சென்னை–செங்கோட்டை, சென்னை–போத்தனூர் சிறப்பு
ஆக.14 இரவு 9.55க்கு சென்னை எழும்பூரில் இருந்து புறப்படும் ரயில் மறுநாள் காலை 11.30க்கு செங்கோட்டை சென்று சேரும்; தாம்பரம், செங்கல்பட்டு, விழுப்புரம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், நெல்லை வழியாக இயங்கும். மறுமார்க்கத்தில், ஆக.17 இரவு 7.45க்கு செங்கோட்டையிலிருந்து புறப்பட்டு மறுநாள் காலை 7.20க்கு சென்னை எழும்பூர் வந்தடையும்.
இதுதவிர, ஆக.14 இரவு 11.50க்கு சென்னை சென்ட்ரலில் இருந்து புறப்படும் ரயில் மறுநாள் காலை 8.30க்கு போத்தனூர் சென்று சேரும்; அரக்கோணம், காட்பாடி, சேலம், ஈரோடு, திருப்பூர் வழியே செல்லும். மறுமார்க்கத்தில், ஆக.17 இரவு 11.50க்கு போத்தனூரில் இருந்து புறப்பட்டு மறுநாள் காலை 8.20க்கு சென்னை சென்ட்ரல் வந்தடையும்.
நாகர்கோவில்–தாம்பரம், மங்களூர்–திருவனந்தபுரம் சிறப்பு
ஆக.17 இரவு 11.15க்கு நாகர்கோவிலில் இருந்து புறப்படும் ரயில் மறுநாள் காலை 10.55க்கு தாம்பரம் வந்தடையும்; நெல்லை, மதுரை, திருச்சி, விழுப்புரம் மார்க்கத்தில் இயங்கும். இதேபோல், ஆக.18 பிற்பகல் 3.30க்கு தாம்பரத்தில் இருந்து புறப்படும் ரயில் மறுநாள் காலை 5.15க்கு நாகர்கோவில் சென்று சேரும்; விழுப்புரம், சிதம்பரம், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திண்டுக்கல், மதுரை, நெல்லை வழியாகச் செல்கிறது.
கூடுதலாக, ஆக.14 மற்றும் 16-ஆம் தேதிகளில் மங்களூரில் இருந்து இரவு 7.30க்கு புறப்படும் ரயில் மறுநாள் காலை 8.00க்கு திருவனந்தபுரம் சென்று சேரும்; மறுமார்க்கத்தில் ஆக.15 மற்றும் 17-ஆம் தேதிகளில் திருவனந்தபுரத்தில் இருந்து மாலை 5.15க்கு புறப்பட்டு மறுநாள் காலை 6.30க்கு மங்களூர் வந்தடையும். பயணிகள், IRCTC மூலம் முன்பதிவு செய்து பயணத் திட்டங்களை சரிபார்த்து கொள்ளுமாறு தெற்கு ரயில்வே அறிவுறுத்தியுள்ளது.
