நாகாலாந்து ஆளுநர் இல.கணேசன் அப்போலோவில் அனுமதி

மாநில பாஜக முன்னாள் தலைவரும், நாகாலாந்து மாநில ஆளுநருமான இல. கணேசன், சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் சற்றுமுன் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். உடல் நலக்குறைவால் அனுமதிக்கப்பட்டுள்ளார்.  தற்போது மருத்துவர்கள் பரிசோதனையில் ஈடுபட்டுள்ள நிலையில், அவரது உடல்நிலை மற்றும் சிகிச்சை தொடர்பான அதிகாரப்பூர்வ தகவல் இதுவரை வெளியிடப்படவில்லை.