டெல்லி நிஜாமுதீன் பகுதியில் வியாழக்கிழமை இரவு நடந்த பார்க்கிங் தகராறு, கொடூரமான ரஜினி பட நடிகை ஹுமா குரேஷியின் சகோதரர் கொலை  செய்யப்பட்டார்  இந்த சம்பவம்  அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  ‘காலா’, ‘வலிமை’ உள்ளிட்ட படங்களில் நடித்த நடிகை ஹுமா குரேஷியின் உறவினர் ஆசிஃப் குரேஷி (வயது 50) இந்த தாக்குதலில் உயிரிழந்தார்.

ஜங்புரா போகல் சந்தைப் பாதையில் இரவு 11 மணியளவில், ஆசிஃப் தன் வீட்டின் வாயிலுக்கு முன் நிறுத்தப்பட்டிருந்த ஸ்கூட்டரை நகர்த்தச் சொல்லியதில் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. அதன்போது, குற்றம் சாட்டப்பட்டவர்கள் ஆசிஃப்பை கூர்மையான ஆயுதத்தால் தாக்கினர். கடுமையாக காயமடைந்த ஆசிஃப், மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டபோது உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது.

ஆசிஃப்பின் மனைவியின் கூற்றுப்படி, குற்றம் சாட்டப்பட்டவர்கள் முன்பும் வாகன நிறுத்தும் பிரச்சினையில் அவருடன் மோதியுள்ளனர். சம்பவம் நடந்த இரவில், ஸ்கூட்டரை நகர்த்தச் சொன்னதிலிருந்து வாக்குவாதம் வெடித்தது. இதன் போது, குற்றம் சாட்டப்பட்ட உஜ்வால் என்ற நபர் முதலில் தாக்குதல் நடத்த, அவரது சகோதரர் கவுதமும் இணைந்ததாக கூறப்படுகிறது. போலீசார் இருவரையும் கைது செய்துள்ளனர்.

இந்த அதிர்ச்சிகர சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அக்கம்பக்கத்தினர் மற்றும் ஆசிஃப்பின் குடும்பத்தினர், ஒரு சிறிய தகராறுக்காக நடந்த இந்த கொடூர செயலில் கடும் கோபத்தையும் துயரத்தையும் வெளிப்படுத்தி, குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.