பிரபல நடிகை காயத்ரி ரகுராம் அதிமுகவில் இணைந்துள்ளார். அண்ணாமலை மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டை முன்வைத்து பாஜகவில் இருந்து சமீபத்தில் விலகினார். இதனையடுத்து, அவர் விசிக அல்லது திமுகவில் இணையவுள்ளதாக பரவலாக பேசப்பட்டது. இந்த நிலையில், திடீர் திருப்பமாக இபிஎஸ் முன்னிலையில் அதிமுகவில் ஐக்கியமாகி உள்ளார். அவருக்கு முக்கிய பொறுப்பு வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது