காங்கிரஸ் கட்சியின் எம்.பியும் மூத்த தலைவரான கார்த்தி சிதம்பரம் தற்போது உடல்நல குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக தகவல் வெளிவந்துள்ளது. சிதம்பரம் தொகுதி எம்பி கார்த்தி சிதம்பரம் வயிறு சம்பந்தமான பிரச்சனை காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக முதற்கட்ட தகவல் வெளிவந்துள்ளது.
இவரது உடல் நலம் குறித்த அறிக்கை விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் இந்த தகவல் காங்கிரஸ் தொண்டர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது. மேலும் ஏற்கனவே பாமக கட்சியின் நிறுவனர் ராமதாஸ் மற்றும் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ ஆகியோர் சென்னை அப்போலோ மருத்துவமனையில் உடல்நல குறைவால் சிகிச்சை பெற்று வருவது குறிப்பிடத்தக்கதாகும்.
