தேமுதிக கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த். கேப்டன் விஜயகாந்த் மறைவுக்கு பிறகு அந்த கட்சியின் பொதுச்செயலாளராக பிரேமலதா பதவி ஏற்றார். தற்போது தேர்தல் நெருங்கி வருவதால் அவர் கட்சிப் பணிகளை செய்து வருவதோடு தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணமும் மேற்கொண்டு வருகிறார்.
இந்த நிலையில் பிரேமலதா விஜயகாந்த் தாயார் அம்சவேணி உடல் நலக்குறைவு மற்றும் வயது மூப்பினால் காலமானார். அவருக்கு 88 வயது ஆகிறது. மேலும் அவரது மரணம் பிரேமலதா விஜயகாந்த் குடும்பத்தில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் அவரது மறைவுக்கு அரசியல் கட்சியின் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
