தமிழகத்தில் தற்போது தமிழக வெற்றி கழகத்தின் ஆட்சி நடைபெற்று வரும் நிலையில் முதலமைச்சராக விஜய் இருக்கிறார். தேர்தலுக்கு முன்பாக தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர் விஜய் கரூர் குற்றச்சாட்டுக்காக செல்லும்போது கூட்ட நெரிசல் ஏற்பட்டு கிட்டத்தட்ட 41 பேர் வரை உயிரிழந்தனர். இது தொடர்பாக உச்ச நீதிமன்ற உத்தரவின் படி சிபிஐ விசாரணை நடத்தி வரும் நிலையில் அமைச்சர்கள் ஆதவ் அர்ஜுனா உள்ளிட்டோரும் விஜயும் ஏற்கனவே டெல்லிக்கு விசாரணைக்காக சென்றுள்ளனர்.

இந்த நிலையில் முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு கரூர் செல்வதாக விஜய் அறிவித்திருந்த நிலையில் இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் திமுக வழக்கு தொடர்ந்தது. பாதிக்கப்பட்ட குடும்பங்களை முதலமைச்சர் விஜய் சந்திக்க தடை விதிக்க வேண்டும் என திமுக வழக்கு தொடர்ந்த நிலையில் அந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் திமுகவின் இடையீட்டு மனுவை விசாரணைக்கு ஏற்க மறுத்துவிட்டது. மேலும் உதவிகள் வழங்குவது எப்படி சாட்சியங்களை கலைப்பதாகும் என கேள்வி எழுப்பியதால் கரூர் விவகாரம் தொடர்பாக அமைச்சர் ஆதவ் அர்ஜுனா முதலமைச்சர் விஜய் பேசுவதற்கு தடை கோரி தாக்கல் செய்த மனுவை திமுக வாபஸ் பெற்றுள்ளது.