ஒரு நபர் புகையிலை வைத்துக் கொள்வதற்காக வாங்கியுள்ள 7.75 லட்ச ரூபாய் தங்க டப்பாவும், அவரது வித்தியாசமான ஹேர்ஸ்டைலும் தற்போது இணையத்தில் பேசுபொருளாகியுள்ளது. பொதுவாகப் புகையிலை அல்லது வெற்றிலை போடும் சுண்ணாம்பு வைத்துக் கொள்ளப் பயன்படுத்தப்படும்  சிறிய டப்பிகள் பிளாஸ்டிக் அல்லது சாதாரண உலோகத்தில்தான் இருக்கும். ஆனால், ஒரு நபர் இதற்காகத் தங்கம் கொண்டு பிரத்யேகமாக ஒரு சிறிய டப்பாவைச் செய்து அசத்தியுள்ளார். பத்ரிநாத் சுக்லா என்பவர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் இந்த தங்க டப்பாவின் வீடியோவைப் பகிர்ந்துள்ளார்.

அந்த வீடியோவில், கையில் பளபளக்கும் தங்க டப்பாவை வைத்துக் கொண்டு பெருமிதமாகக் காட்டுகிறார் அந்த நபர். ஆரம்பத்தில் இதன் விலை சுமார் 7 லட்சம் ரூபாய் என்று கூறப்பட்டாலும், அருகில் இருந்த அதன் உண்மையான உரிமையாளர் அதைத் திருத்தி, இதன் விலை சரியாக 7.75 லட்சம் ரூபாய் என்று கூறுகிறார். வெறும் சுண்ணாம்பு வைத்துக்கொள்ளும் ஒரு சிறிய டப்பாவுக்கு இவ்வளவு பெரிய தொகை செலவிடப்பட்டுள்ளதை ஆச்சரியத்துடன் பார்த்து வருகின்றனர் நெட்டிசன்கள்.

 

 

View this post on Instagram

 

A post shared by badrinath Shukla (@badrinath6340)

இந்த வைரல் வீடியோவில் தங்க டப்பாவை விட அந்த நபரின் தோற்றம்தான் அனைவரையும் அதிகம் ஈர்த்துள்ளது. அவது தாடியில் ஹாலிவுட்டின் பிரபலமான மார்வெல் வில்லன் ‘தானோஸ்’ போன்று தனித்துவமான வடிவம் செதுக்கப்பட்டுள்ளது. இந்த வித்தியாசமான ‘தானோஸ்’ தாடி லுக் இணையத்தில் செம வைரலாகியுள்ளது.இந்த வீடியோ வெளியானதும் கமெண்ட் பகுதியில் பலரும் தங்களது கலகலப்பான கருத்துக்களைப் பகிர்ந்து வருகின்றனர்.  மேலும் எளிமையான முறையில் பயன்படுத்தப்படும் ஒரு சாதாரண பொருளை இவ்வளவு ஆடம்பரமாகத் தங்கத்தில் மாற்றி, வித்தியாசமான தோற்றத்துடன் வலம்வரும் இந்த நபரின் செயல் தற்போது சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தையும் சிரிப்பலையையும் ஏற்படுத்தியுள்ளது.