தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் கரூரில் பிரச்சாரம் மேற்கொண்ட போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி பெண்கள் குழந்தைகள் என கிட்டத்தட்ட 41 பேர் உயிரிழந்த நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் வடக்கு மண்டல ஐஜி அஸ்ரா கார்க் தலைமையில் சிறப்பு புலனாய்வு குழுவை விசாரணைக்கு நியமித்தது. இந்த குழுவில் எஸ்பிக்கள் விமலா, சியாமளாதேவி மற்றும் ஏடிஎஸ்பிகள் உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ள நிலையில் தற்போது கூடுதலாக எட்டு அதிகாரிகள் சேர்க்கப்பட்டுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக விசாரிக்க கூடுதலாக எட்டு அதிகாரிகளை இந்த குழுவில் நியமித்துள்ளனர். இந்த குழு இன்று தங்களுடைய விசாரணையை தொடங்கியுள்ளது. மேலும் இந்த சம்பவம் தொடர்பாக தமிழக வெற்றிக் கழகத்தின் முக்கிய நிர்வாகிகளின் முன் ஜாமின் மனுக்கள் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில் அவர்களை கைது செய்ய தனிப்படை போலீசார் விரைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
